கடந்த 2012-ம் ஆண்டு டெல்லியில் மருத்துவ கல்லூரி மாணவி ஓடும் பேருந்தில் 6 பேர் கொண்ட ஒரு கும்பம் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.பின்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வளைகளை ஏற்படுத்தியது. இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட 6 பேரை டெல்லி போலீசார் கைது செய்தனர்.பேருந்து ஓட்டுநர் ராம்சிங்,ராம்சிங்கின் சகோதரர் முகேஷ்சிங்,வினய்ஷர்மா,பவன்குப்தா,அக்சய் குமார் சிங் தாகூர் (பேருந்து உதவியாளர்) ,ஒரு சிறுவன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் 6 பேரும் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டதால் அவர்களில் 5 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. 6 பேரில் ஒருவர் சிறுவர் என்பதால் அவர் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டார்.பின்பு 3 ஆண்டுகள் கழித்து சீர்திருத்தப்பள்ளியில் இருந்து விடுவிக்கப்பட்டார். அந்த 5 பேரில் முக்கிய குற்றவாளியான ராம்சிங் திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்டார்.இதனால் மற்ற 4 பேரும் தூக்கு தண்டனையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையிடு செய்தனர். ஆனால் உச்சநீதிமன்றம் 4 பேருக்கு தூக்கு தண்டைனையை உறுதிசெய்தது.
இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளி அக்ஷய் குமார்சிங் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்தார். அக்ஷய் குமார்சிங் தாக்கல் செய்த சீராய்வு மனு மீது விசாரணை டிசம்பர் 17- ஆம் தேதி நடைபெறும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்தது. இதனை தொடர்ந்து நேற்று விசாரிப்பதாக இருந்தது.இந்த வழக்கில் இருந்து தலைமை நீதிபதி பாப்டே விலகினார்.இதனால் இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் பானுமதி, அசோக் பூஷன், போபண்ணா அடங்கிய அமர்வு வழக்கை விசாரிக்கிறது.
குஜராத் : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 டி20 மற்றும்…
டெல்லி : உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்களுக்கு இடையே உள்ளஆண்டுகளில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கான…
சென்னை : அமெரிக்காவின் ஹூஸ்டன் மாநகரத்தில் 1927ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு மற்றும்…
சென்னை : நேற்று மத்திய அரசு கல்வி உரிமை சட்டத்தில் (RTE) ஒரு முக்கிய திருத்தத்தை கொண்டு வந்தது. அதன்படி,…
சென்னை : வழக்கமாகவே படங்களில் வரும் காட்சிகளை மட்டும் பிரமாண்டமாக எடுக்காமல் படத்தில் இடம்பெறும் பாடல்களையும் பிரமாண்டமாக எடுப்பவர் தான் பிரம்மாண்டத்திற்கு…
சென்னை : மறைத்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 37-வது ஆண்டு நினைவு நாள் இன்று செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 24) அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து,…