கொரோனா பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில், நாளை முதல் டெல்லி மெட்ரோ ரயிலில் பயணிகள் நின்றுகொண்டே பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில், நேற்று முன்தினம் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் (டிடிஎம்ஏ), லெப்டினன்ட் கவர்னர் அனில் பைஜால் கலந்துகொண்ட கூட்டத்தில் நாளை முதல் அனைத்து கட்டுப்பாடுகளையும் திரும்பப் பெறவும், முகமூடி அணியாததற்கான அபராதத்தை 2,000 ரூபாயில் இருந்து 500 ரூபாயாகக் குறைக்க முடிவு செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து, டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ள வழங்கிய சமீபத்திய வழிகாட்டுதலில் நாளை முதல் முன்னர் விதிக்கப்பட்ட அனைத்து தடைகள் அல்லது கட்டுப்பாடுகளை நீக்குவதாகவும், டெல்லி மெட்ரோ ரயிலில் பயணிகள் எந்த தடையும் இல்லாமல் மெட்ரோவில் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள். அதாவது, அவர்கள் நின்று மற்றும் அமர்ந்து பயணம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டது
நாள் முழுவதும் பயணிகள் நுழைவதற்கு வசதியாக மெட்ரோ நிலையங்களின் அனைத்து வாயில்களும் திறந்தே இருக்கும் என கூறியுள்ளது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…