இம்பால், ராஞ்சி, சென்னை ஆகிய இடங்களில் என்ஐஏ கிளை அமைக்க அனுமதி..!

சமீப காலமாக சில பகுதிகளில் பயங்கரவாத செயல்கள் அதிகரித்து வருகின்றன. பயங்கரவாத தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் தேசிய புலனாய்வு அமைப்பின் (என்.ஐ.ஏ) தலைமையகம் டெல்லியில் உள்ளது.
மேலும், என்ஐஏ கிளைகள் கவுகாத்தி, மும்பை, கொச்சின், லக்னோ, ராய்ப்பூர், சண்டிகர், ஜம்மு, கொல்கத்தா, ஐதராபாத் ஆகிய இடங்களில் உள்ளது. இந்நிலையில், சென்னை, ராஞ்சி, இம்பால் ஆகிய நகரங்களில் என் ஐ ஏ கிளையை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இரண்டு நாள்களுக்கு முன் கர்நாடகா பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் பெங்களூரில் என் ஐ ஏ கிளை அமைக்க வேண்டும் என கோரிக்கை வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.