தேசத்துரோக சட்டத்தை மறு பரிசீலனை செய்ய அனுமதி! – உச்ச நீதிமன்றம்
தேசத்துரோக வழக்குகளை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பான விவரங்களை மத்திய அரசு தாக்கல் செய்ய உத்தரவு.
தேசத்துரோக வழக்குகளை பதிவு செய்யும் சட்டப்பிரிவுகளை மறு பரிசீலனை செய்ய மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மறு பரிசீலனை செய்யும் வரை தேசத்துரோக வழக்குகளை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பான விவரங்களை மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
தேசத்துரோக வழக்குகளை பதிவு செய்யும் சட்டப்பிரிவுகளில் மாற்றங்களை கொண்டுவரும் பணிகள் தொங்கியிருப்பதாக மத்திய அரசு நீதிமன்றத்தில் தெரிவித்ததை அடுத்து, மறுபரிசீலனை பணிகளை 3-4 வாரங்களில் முடிக்க வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தல் வழங்கியது. தேசத்துரோக வழக்குகளை பதிவு செய்யும் சட்டப்பிரிவுகளை நீக்கக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டதில், இதுதொடர்பாக மறு பரிசீலனை செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.