கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்வதால் கடந்த 5 மாதங்களாக இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில் உள்ளது. இந்நிலையில், மக்களின் நிலை கருதி சில சில தளர்வுகளை அரசு ஏற்படுத்தி வருகிறது. அதில் ஏற்கனவே அறிவிக்காட்ட இரு தளர்வுகளில் கடைகள், மருத்துவமனைக்கு செல்பவர்கள் அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் வேலைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தற்போது மூன்றாம் கட்ட தளர்வாக ஆகஸ்ட் 5-ம் தேதிக்கு பின்பு யோகா நிறுவனங்கள் உடற்பயிற்சிக் கூடங்கள் ஆகியவற்றைத் திறக்க அனுமதி அளித்துள்ளது. ஆனால் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை பள்ளிகள், கல்லூரிகள், மெட்ரோ ரயில் சேவை, சினிமா அரங்குகள் மற்றும் பார்களை திறக்க அனுமதி கிடையாது எனவும் அறிவித்துள்ளது. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உடனான விரிவான ஆலோசனைகளுக்கு பின்பே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.