டெல்லியில் பள்ளி, கல்லூரிகளை திறக்க அனுமதி!- மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம்!
டெல்லியில் பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள் மற்றும் உடற்பயிற்சி கூடங்களை மீண்டும் திறக்க, மாநில பேரிடர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் முடிவு.
டெல்லியில் பள்ளி, கல்லூரிகளை திறக்க மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அனுமதி அளித்துள்ளது. டெல்லியில் ஆளுநர் அணில் பைஜால் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் கட்டுப்பாடுகள் தளர்வுகள் குறித்து முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, டெல்லியில் 9-12-ஆம் வாக்குகளுக்கு பிப்ரவரி 7-ஆம் தேதி முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட உள்ளன. மற்ற வகுப்புகளுக்கு படிப்படியாக திறக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.
டெல்லியில் தடுப்பூசி போடாத ஆசிரியர்கள் பள்ளிக்கு வர அனுமதியில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், டெல்லியில் ஒருநேர ஊரடங்கில் ஒருமணிநேரம் குறைக்கப்பட்டுள்ளது. இரவு ஊரடங்கு இரவு 10 மணிக்கு பதிலாக இரவு 11 மணிக்கு தொடங்கும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், பயிற்சி நிறுவனங்கள் மற்றும் உடற்பயிற்சி கூடங்களை மீண்டும் தறக்க, டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணைய நடத்திய கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் பயிற்சி நிறுவனங்கள் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மீண்டும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளன. டெல்லியில் 100 சதவீத வருகையுடன் அலுவலகங்கள் செயல்படும். கார்களில் ஓட்டுநர்களுக்கு கட்டாய முகக்கவசம் அணிய வேண்டும் என்பதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், சந்தைகள், சந்தை வளாகங்கள், மால்கள், அத்தியாவசியமற்ற பொருட்கள் மற்றும் சேவைகளைக் கையாளும் அனைத்து கடைகள் மற்றும் நிறுவனங்கள் கட்டுப்பாடு இல்லாமல் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை திறக்க அனுமதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் கொரோனா தொற்று பரவல் சற்று குறைந்து வருவதால், டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் (டிடிஎம்ஏ) பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் ஜிம்களை மீண்டும் திறக்க முடிவு செய்துள்ளது,