இந்தியாவில் சர்வதேச விமானநிலையங்கள் திறக்க அனுமதி!
இந்தியாவில் சர்வதேச விமான நிலையங்கள் அனைத்தும் திறக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
கொரோனா அச்சம் காரணமாக, நாடு முழுவதும் 4 கட்டங்களாக ஊரடங்கு அமலில் உள்ளது. தற்பொழுது 4 ஆம் கட்ட ஊரடங்கு நாளையுடன் முடிவடையும் நிலையில், ஜூன் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்படுகிறது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில், ஜூன் 1 தேதி முதல் 30 தேதி வரை படிப்படியாக தளவுகளுக்கான அளிப்பதற்கு UNLOCK 1.0 என்ற பெயரில் 3 கட்டங்களாக பொதுமுடக்க தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.
அதில் தற்பொழுது சர்வதேச விமானநிலையங்கள் திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும், மூன்றாம் கட்ட தளர்வில் மெட்ரோ ரயில், சினிமா ஹால், நீச்சல் குளம், பொழுதுபோக்கு பூங்காக்கள் செயல்பட முடிவு எடுக்கப்படும் என அறிவித்தது.