போக்குவரத்தில் முடங்கிய வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய அனுமதி.!
போக்குவரத்தில் சிக்கி உள்ள வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த சில மாதங்களாக வெங்காய ஏற்றுமதி அதிகரித்திருந்தது. ஆனால், அண்மையில் பெய்த கனமழை உள்ளிட்டவைகளால் வெங்காய விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், உள்நாட்டில் வெங்காய பற்றாக்குறை ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. இதனையடுத்து வெளிநாடுகளுக்கு வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்து அறிவிப்பு வெளியிட்டது.
இந்தியா, பங்களாதேஷுக்கு வெங்காய ஏற்றுமதியை நிறுத்திய ஒரு நாளுக்குப் பிறகு, தற்போது போதுமான அளவு இருப்பில் இருப்பதாக அரசாங்கம் உறுதியளித்த போதிலும், நாட்டின் வெங்காயம் விலைகள் 50 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்தன. பங்களாதேஷின் சில்லறை சந்தையில் ஒரு கிலோவிற்கு 120 வரை உயர்ந்துள்ளது. இது பொதுவாக 80-85 தக்காவில் விற்கப்படுகிறது.
இந்நிலையில், பங்களாதேஷுக்குச் செல்லும் நூற்றுக்கணக்கான வெங்காய லாரிகள் மேற்கு வங்காளத்தின் பல்வேறு துறைமுகங்கள் மற்றும் நில எல்லைகளில் சிக்கித் தவித்தன. தற்போது எல்லைகளில் உள்ள வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய இந்தியா அனுமதித்துள்ளது.