ஜனவரி முதல் வெங்காய ஏற்றுமதிக்கு அனுமதி – மத்திய அரசு உத்தரவு
வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்திருந்த நிலையில், ஜனவரி முதல் வெங்காய ஏற்றுமதிக்கு அனுமதி அளித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கு மற்றும் மழை காரணமாக வெங்காய உற்பத்தி இந்த ஆண்டு பெரிதும் பாதிக்கப்பட்டது. இதன் விளைவால் வெங்காய உற்பத்தியும் கடுமையாக குறைந்தது. இதனால், சில்லறை, மொத்த வர்த்தகம் ஆகியவற்றில் வெங்காயத்துக்கு கெடுபிடி ஏற்பட்டது. நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை உச்சத்தை தொட்டது.
இதையடுத்து, வெங்காயத்தின் விலையேற்றத்தை கட்டுப்படுத்தும் வகையில், கடந்த அக்டோபரில் சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் என அனைத்திற்கும் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், தற்போது நிலைமை சீராகி வருவதால் ஜனவரி முதல் அனைத்து வகையான வெங்காயம் ஏற்றுமதிக்கு அனுமதி அளித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.