இமாச்சலபிரதேசத்தில் தனியார் மருத்துவமனைகளில் ரூ.500-க்கு RT-PCR சோதனை நடத்த அனுமதி…!

Default Image

இமாச்சல பிரதேசத்தில், தனியார் மருத்துவமனைகள் மற்றும் ஆய்வகங்களில் ரூ.500 க்கு ஆர்டி-பி.சி.ஆர் சோதனைகளை நடத்த இமாச்சல பிரதேச அரசு அனுமதித்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை ஒவ்வொரு மாநில அரசுகளும் மேற்கொண்டு வருகிறது. அதன்படி அனைத்து மாநிலங்களிலும், மக்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், லேசான அறிகுறிகள் தெரிந்தாலே, மக்கள் அருகில் மருத்துவமனைகளுக்கு சென்று பரிசோதனை செய்துகொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இமாச்சல பிரதேசத்தில், தனியார் மருத்துவமனைகள் மற்றும் ஆய்வகங்களில் ரூ.500 க்கு ஆர்டி-பி.சி.ஆர் சோதனைகளை நடத்த இமாச்சல பிரதேச அரசு அனுமதித்துள்ளது.

மேலும் வீட்டிற்கு சென்று, மாதிரிகளை சேகரித்து சோதனை மேற்கொள்ள, ரூ.750  கட்டணம் நிர்ணயித்துள்ளது. மாநிலத்தில் 18-44 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றும், அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்