உத்தரபிரதேசம் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியில் தொல்லியல் துறை ஆய்வு நடத்த அலகாபாத் உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மசூதியில் ஆய்வுக்கு அனுமதிக்க கூடாது என்ற இஸ்லாமிய அமைப்பு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிடப்பட்டது. இதற்கு முன் கோயில் இருந்த இடத்தில் ஞானவாபி மசூதி கட்டப்பட்டதா என்பதை அறிய ஆய்வு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஞானவாபி மசூதி மசூதியில் பழங்கால இந்து கோயில் இருந்ததாக கூறி 4 பெண்கள் வாரணாசியில் வழக்கு தொடர்ந்தனர். இதன்பின், வாரணாசி நீதிமன்றம் தொல்லியல் ஆய்வு நடத்த அனுமதி தந்ததை எதிர்த்து இஸ்லாமிய அமைப்புகள் மேல்முறையீடு செய்தது.
இதனையடுத்து, இந்திய அகழாய்வுத்துறை கடந்த மாதம் 24ம் தேதி அகழாய்வு பணியை தொடங்கியதும் உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து, மசூதி கமிட்டியை உயர் நீதிமன்றத்தை அணுக கூறியது. அதன்படி, இஸ்லாமிய அமைப்பு மனு உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த நிலையில், இஸ்லாமிய அமைப்பு மனுவை தள்ளுபடி செய்து, ஞானவாபி மசூதியில் தொல்லியல் துறை ஆய்வு நடத்த அலகாபாத் உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
சென்னை : வரும் நவம்பர் 20-ஆம் தேதி நயன்தார-விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…
சென்னை : நயன்தாரா மற்றும் தனுஷ் இருவரும் ஒன்றாக யாரடி நீ மோகினி, நானும் ரவுடி தான், எதிர்நீச்சல் ஆகிய…
ஜான்சி : உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி நகரில் உள்ள ராணி லட்சுமி பாய் அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள்…
சென்னை -சபரி மலை ஐயப்பனுக்கு மாலை அணிந்த பின் என்ன செய்யலாம்.. செய்ய கூடாது என்பதை இந்த செய்தி குறிப்பில்…