மேகதாது அணையை கட்ட அனுமதி வழங்க வேண்டும் என்றும் மத்திய நீர்வளத்துறை அமைச்சரிடம் கர்நாடக முதல்வர் பசுவராஜ் கோரிக்கை.
கர்நாடகாவில் 4வது முறையாக முதலமைச்சராக பதவி ஏற்றத்தை தொடர்ந்து 2 ஆண்டுகள் நிறைவடைந்த பின், தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் எடியூரப்பா. 75 வயதை தாண்டிய தலைவர்களுக்கு பாஜகவில் கட்டாய ஓய்வு அளிக்கப்படுகிறது. இதன் காரணமாகவும், பல்வேறு எதிர்ப்புகள் எழுந்த நிலையிலும் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தார்.
இவரது ராஜினாமாவை தொடர்ந்து கர்நாடகாவின் புதிய முதல்வராக பசுவராஜ் பொம்மை தேர்வு செய்யப்பட்டு, சமீபத்தில் பதவியும் ஏற்றார். இதனிடையே, கடந்த சில வாரங்களாக கர்நாடக அரசியலில் பரபரப்பான சூழ்நிலை நிலவியதால் மேகதாது அணை விவகாரம் சற்று தணிந்து இருந்தது.
ஆனால், புதிய முதல்வராக பொறுப்பேற்ற பசுவராஜ் பொம்மை, மேகதாதுவில் அணை கட்டும் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்றும் பிரதமரிடம் அனுமதி பெற்று மேகதாதுவில் அணை கட்டும் பணிகள் தொடங்கும் எனவும் கூறியிருந்தார். மேலும், காவிரி உபநீரை பயன்படுத்துவதில் எங்களுக்கு முழு உரிமையும் இருக்கிறது. இதனை யாரும் தடுக்க முடியாது என்று தெரிவித்தார்.
இந்த நிலையில், இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை இன்று காலை அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், அமித்ஷா உள்ளிட்ட முக்கிய தலைவர்களை சந்தித்து உள்ளார். தன்னை முதலமைச்சராக நியமனம் செய்ததற்காக அவர்களுக்கு பசவராஜ் பொம்மை நன்றி தெரிவிக்கிறார்.
இதைத்தொடர்ந்து மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்துள்ளார். அப்போது, மேகதாது அணை விவகாரம் உள்ளிட்ட கர்நாடக மாநில நீர் திட்டங்கள் குறித்து விரிவாக பேசி உள்ளார். மேலும், மேகதாது அணையை கட்ட அனுமதி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.
இன்று மாலை, பிரதமர் மோடி, பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட முக்கிய தலைவர்களை சந்திக்கவுள்ளார். இந்த சந்திப்பில் மேகதாது ஆணை குறித்து ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சற்று தனித்திருந்த மேகதாது அணை விவகாரம் தற்போது மீண்டும் சூடு பிடிக்க ஆரம்பிக்கிறது. தமிழக அரசு மேகதாது அணையை கட்டவிடமாட்டோம் என கூறி வரும் நிலையில், அணையை கட்டியே தீருவோம் என புதிய முதல்வர் தெரிவித்துள்ளார்.
சென்னை : சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகரன் என்பவர்…
சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் இன்று நடைபெற்று வரும் நிலையில், அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த பாலியல்…
சென்னை :திருவாதிரை ஸ்பெஷல் களி ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி-…
சென்னை: நடிகை நயன்தாராவின் 'Beyond the Fairy Tale' ஆவணப்படத்தில் 'நானும் ரவுடி தான்' படத்தின் காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாகக்…
சென்னை: ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிப்பில் 'KGF 2' திரைப்படம் கடந்த 2022ம் ஆண்டு வெளியானதைத் தொடர்ந்து அவரது அடுத்த…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் இன்று நடைபெற்று வரும் நிலையில், அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த…