ஏழுமலையான் கோவில் நவராத்திரி பிரம்மோற்சவ விழாவிற்கு 25 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா தொடங்க உள்ளது. இந்நிலையில் தினமும் 20,000 முதல் 25,000 பக்தர்களை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இதைத் தொடர்ந்து அக்.,16 தேதியிலிருந்து அக்.,24ந்தேதி வரை தொடர்ந்து 9 நாட்கள் நவராத்திரி பிரம்மோற்சவ விழா நடைபெறுகிறது.
3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கின்ற இந்தப் பிரம்மோற்சவ விழாவில் கோவிலின் 4 மாடவீதியில் வாகன ஊர்வலம் நடத்தவும் வாகன ஊர்வலத்தில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்ய ரூ.300 டிக்கெட் பக்தர்கள் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஸ்ரீவாணி டிரஸ்ட்டுக்கு காணிக்கை அளித்த பக்தர்கள்,வி.ஐ.பி. தரிசன டிக்கெட் பக்தர்கள், உள்ளூர் பக்தர்கள் எனத் தினமும் 20 ஆயிரத்தில் இருந்து 25 ஆயிரம் பக்தர்கள் வரை 4 மாடவீதிகளில் அமர வைக்கப்படுவர் என்றும் அடையாள அட்டை வைத்திருக்கும் உள்ளூர் பக்தர்கள் மட்டும் வாகனச் சேவையை பார்க்க 4 மாடவீதிகளில் அனுமதிக்கப்படுவர்.
கொரோனாத்தொற்றை தடுக்கும் வகையிலும், பக்தர்களுக்கு இடையூறு இல்லாமல் அமர நான்கு மாடவீதிகளில் கேலரிகளில் 6 அடி தூரத்துக்கு வெள்ளை நிறத்தில் கட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் நவராத்திரி பிரம்மோற்சவத்திற்கு கொடியேற்றம், கொடியிறக்கம் மற்றும் தேரோட்டம் நடைபெறாது என்று திருப்பதி தேவஸ்தானம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை : இன்று தமிழக வெற்றிக் கழக கட்சி சார்பில், தவெக ஐடி விங் நிர்வாகிகளுக்கு பயிற்சி கூட்டம் நடைபெற்றது.…
பெங்களூர் : நேற்று சின்ன சாமி மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…
சென்னை : தமிழ்நாட்டில் அடுத்தாண்டு (2026) இதே நேரத்தில் சட்டமன்ற தேர்தல் க்ளோபரங்கள் , பரபரப்புகள் என தமிழக அரசியல்…
டெல்லி : இன்றயை காலத்தில் யுபிஐ (UPI - Unified Payments Interface) பரிவர்த்தனை என்பது அதிகரித்துள்ள நிலையில், தொடர்ச்சியாக இதனை…
சென்னை : தமிழ் சினிமாவில் நல்ல நடிகராக வலம் வரும் நடிகர் பாபி சிம்ஹாவின் கார் இன்று விபத்துக்குள்ளாகி கார்…
சென்னை : துரை வைகோ, அவரது தந்தை வைகோ நிறுவித்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் கட்சியின் முதன்மை செயலாளர்…