சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி ..!திருவாங்கூர் தேவஸம் போர்டு மறு சீராய்வு செய்யக்கோரி மனு தாக்கல்..!

Published by
Venu

சபரிமலை வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மறு சீராய்வு செய்யக்கோரி மனு தாக்கல் செய்வோம் என்று திருவாங்கூர் தேவஸம் போர்டு தலைவர் பத்மகுமார் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு இந்திய இளம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் சபரிமலை கோயிலில் 10 முதல் 50 வயதுடைய பெண்களுக்கு அனுமதியில்லை என்பதால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

பின்னர் இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அரசியல் சாசன அமர்வுக்கு வழக்கை மாற்றி உத்தரவிட்டனர்.இந்த வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஷ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்தது.இந்த விசாரணையில் ஏன் அனைத்து வயது பெண்களும் கோவிலுக்குள் நுழையக் கூடாது? இந்து மதத்தில் தடை ஏதும் உள்ளதா என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.பின் சபரிமலை தேவசம் போர்டு தரப்பில் சபரிமலை கோயிலின் ஆகம விதிகளின்படியே மாதவிலக்கு பருவத்தில் உள்ள பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்று விளக்கமளிக்கப்பட்டது.மேலும் மத உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் வாதிடப்பட்டது.

 

இந்த விவகாரத்தில் கேரள அரசு நீதிமன்றம் என்ன முடிவெடுத்தாலும் தங்களுக்கு ஆட்சேபணை இல்லை என்று தெரிவித்தது.உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் சபரிமலை வழக்கில் இன்று தீர்ப்பு அளித்தது.

தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தீர்ப்பில், சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்கள் வழிபட அனுமதி அளித்துள்ளார்.கோவிலுக்குள் பெண்கள் செல்ல அனுமதி மறுப்பது சட்ட விரோதம் என்று தீர்ப்பு வழங்கினார்.

Related image

 

இதன் பின்னர்  தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அளித்த தீர்ப்பை நீதிபதி கன்வில்கருடன் இணைந்து ஏற்பதாக நீதிபதிகள் நாரிமன், சந்திரசூட் அறிவித்தனர். சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என 5 நீதிபதிகள் அமர்வில் 4 நீதிபதிகள் தீர்ப்பு வழங்கியுள்ளனர்.அதில் நீதிபதி தீபக் மிஸ்ரா,நீதிபதி கன்வில்கர், நீதிபதிகள் நாரிமன், சந்திரசூட் ஆகியோர் சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று தீர்ப்பு வழகியுள்ளனர்.ஆனால் தலைமை நீதிபதி அமர்வில்  நீதிபதி இந்து மல்ஹோத்ரா மட்டும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார்.

அவர் அளித்த தீர்ப்பில் சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது பல்வேறு பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்று  நீதிபதி இந்து மல்ஹோத்ரா மாறுபட்ட தீர்ப்பு வழங்கினார். 

இந்நிலையில் தீர்ப்பு தொடர்பாக திருவாங்கூர் தேவஸம் போர்டு தலைவர் பத்மகுமார் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்கிறோம்.அதேபோல் சபரிமலை வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மறு சீராய்வு செய்யக்கோரி மனு தாக்கல் செய்வோம்.இதுகுறித்து தேவசம்போர்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்.மேலும்  மதத் தலைவர்களுடன் ஆலோசித்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்றும்  திருவாங்கூர் தேவஸம் போர்டு தலைவர் பத்மகுமார் தெரிவித்துள்ளார்.

 

Published by
Venu

Recent Posts

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் எப்போது தொடங்கும்? அப்பாவு கொடுத்த அப்டேட்!

சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் அடுத்து எப்போது தொடங்கும் என சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு இன்று சென்னை தலைமை…

4 minutes ago

முதல் நாளிலேயே தொடர் அமளி! இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு!

டெல்லி : நாடாளுமன்ற மக்களவை குளிர்கால கூட்டத் தொடரின் முதல் நாளே மாநில அவையும், மக்களைவையும் நாள் முழுவதும் ஒத்தி…

6 minutes ago

“நான் பக்கா சென்னை பையன்”… புஷ்பா பட ப்ரோமோஷனில் அல்லு அர்ஜுன் கலகல.!

சென்னை : சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜூன் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'புஷ்பா-2'  திரைப்படம் டிசம்பர் 5 ஆம் தேதி…

13 minutes ago

“ராமதாஸுக்கு வேற வேலை இல்லை., பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை!” மு.க.ஸ்டாலின் காட்டம்!

சென்னை : அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் ஊழல் குற்றசாட்டு முன்வைக்கப்பட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதற்காக அதானி நேரில்…

22 minutes ago

AUS vs IND : விக்கெட்டை சொல்லி எடுக்கும் இந்திய அணி! சொந்த மண்ணில் தடுமாறும் ஆஸி.!

பெர்த் : ஆஸ்திரேலியாவுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் தடுமாறினாலும் அதன்பிறகு பவுலிங்கில் இந்திய அணி…

1 hour ago

அதிரடியாக குறைந்த தங்கம் விலை… சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.800 குறைந்துள்ளது. தங்கத்தின் விலை கடந்த வாரம் சவரனுக்கு ரூ.3,000…

1 hour ago