கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி – புதுச்சேரி அரசு
புதுச்சேரியில் கொரோனா கட்டுப்பாடுகள் ஜனவரி 2-ஆம் தேதி வரை நீடித்து அம்மாநில அரசு உத்தரவு.
புதுச்சேரியில் கொரோனா கட்டுப்பாடுகள் ஜனவரி 2ஆம் தேதி வரை நீடித்து அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால், ஆங்கில புத்தாண்டை கொண்டாட டிசம்பர் 31, ஜனவரி 1 மற்றும் 2-ஆம் தேதிகளில் கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளித்துள்ளது. டிசம்பர் 31, ஜனவரி 1 மற்றும் 2-ஆம் தேதிகளில் அதிகாலை 2 மணி வரை மட்டுமே தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது.
இந்த தேதிகளில் அதிகாலை 2 மணி முதல் காலை 5 மணி வரை மட்டுமே ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட டிசம்பர் 24 மற்றும் 25-ஆம் தேதிகளில் இரவு தேவாலயங்களில் வழிபாடு நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி போது மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், காவல்துறை அனுமதி பெற்று புத்தாண்டை முன்னிட்டு கூடுதல் நேரம் மதுக்கடைகளை திறக்கலாம் என புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.