எலெக்ட்ரீஷியன்கள்,பிளம்பர்ஸ் உள்ளிட்ட சுய தொழிலை மேற்கொள்ளுபவர்களுக்கு அனுமதி வழங்கப்படுவதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
கொரோனவைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது.அதாவது சிவப்பு,ஆரஞ்சு மற்றும் பச்சை ஆகிய மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.அதன் அடிப்படையில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் டெல்லியை பொருத்தவரை 4549 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.1362 கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.64 பேர் உயிரிழந்துள்ளனர்.இதற்கு இடையில் மத்திய அரசு அறிவித்த தளர்வுகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், 33 % ஊழியர்களுடன் தனியார் அலுவலங்கள் இயங்கலாம்.ஐடி நிறுவனங்கள்,கால் சென்டர்கள் உள்ளிட்டவை வழக்கம்போல இயங்கலாம் என்று கூறியுள்ளார்.பொதுப்போக்குவரத்து முற்றிலும் முடக்கப்பட்டு தான் இருக்கும்.எலெக்ட்ரீஷியன்கள்,பிளம்பர்ஸ் உள்ளிட்ட சுய தொழிலை மேற்கொள்ளுபவர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை,…
ஐரோப்பா : மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் பயன்படுத்திய பொருட்கள் பிரமாண்ட விலைக்கு ஏலத்தில்…
சென்னை : நடிகர் சூர்யாவின் “கங்குவா” படத்தை வெளியிடத் தடையில்லை என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரூ.55 கோடி ரூபாயை வழங்காமல்…
சென்னை : தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளியை கொண்டாடும்…
சென்னை : சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம்.…
அலகாபாத்: குக்கு வித் கோமாளி மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சிகள் மூலம் புகழ் பெற்ற நடிகை ரம்யா பாண்டியனுக்கும், யோகா…