அதிகரிக்கும் கொரோனா.. திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி- மகாராஷ்டிரா அரசு!
மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியதை தொடர்ந்து அம்மாநில அரசு, சில கட்டுப்பாடுகளை வித்திட்டுள்ளது.
இந்தியாவிலே கொரோனா பாதிப்பு அதிகமான மாநிலமான மகாராஷ்டிராவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியது. அந்தவகையில், அம்மாநிலத்தில் நாள் ஒன்றுக்கு 25,000-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் ஏற்கனவே சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்பொழுது மாநிலம் முழுவதும் மார்ச் 31 ஆம் தேதி வரை சில கட்டுப்பாடுகளை விதித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுவதாகவும், தனியார் நிறுவனங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் மட்டுமே இயங்க அனுமதிக்கப்படும் என்றும், முக கவசம் அணியாதவர்களை அரங்குகள், அலுவலகங்களில் அனுமதிக்கக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.