பாஜகவை தோற்கடிக்க பெரியாரின் கொள்கைகள் தான் அடித்தளம்! கி.வீரமணிக்கு சோனியா காந்தி கடிதம்….

sonia gandhi - k veeramani

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார். முன்னதாக, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள், பெரியார் திடலுக்கு வருகை தர அழைப்பு விடுத்தும், இந்தியா கூட்டணி முன்னெடுக்கும் பணிகளைப் பாராட்டியும் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியிருந்தார்.

தற்போது, அவரது கடிதத்திற்கு சோனியா காந்தி பதில் கடிதம் எழுதியுள்ளார். திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கு சோனியா காந்தி எழுதியுள்ள கடிதத்தில், இந்திய கூட்டணியில் நம்பிக்கை வைத்தற்கும், பெரியார் திடலுக்கு வருகை தர அழைப்பு விடுத்தற்கும் கே.வீரமணிக்கு அவர்களுக்கு நன்றி.

நீங்கள் சரியாக கூறியது போல், கூட்டணி என்பது அரசியல் கூட்டணியை விட அதிகம். சமூக நீதியின் அடித்தளத்தில் கட்டமைக்கப்பட்ட அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் முற்போக்கான செயல்திட்டத்தின் மூலம் மட்டுமே பாஜகவின் பிளவுபடுத்தும் சித்தாந்தத்தை தோற்கடிக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.

தந்தை பெரியாரின் தொலைநோக்குப் பார்வை விளிம்புநிலை சமூகங்கள் கண்ணியத்துடனும் சுயமரியாதையுடனும் வாழ வழி வகுத்தது. அவரது தொலைநோக்கு பார்வையும் உறுதியும் இன்றுவரை நம்மை ஊக்கப்படுத்துகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்