UP-Pepsi Staff Shoot Out [file image]
உத்தரபிரதேசம்: உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள மதுராவில் சாட்டா நகரில் உள்ள பெப்சி தொழிற்சாலையில் பணிபுரியும் பிரேம் சிங் மர்ம நபர்களால் துப்பாக்கியால் தலையில் சுடப்பட்டுள்ளார். இவர் பெப்சி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார்.
சம்பவம் நடந்த அன்று சக ஊழியருடன் பைக்கில் இரவு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, மர்ம ஆசாமிகள் அவரைத் தலையில் சுட்டுக் கொன்று விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். அங்கு நெடுஞ்சாலையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் இந்த சம்பவம் பதிவாகியிருந்தது.
அந்த வீடியோவில், ப்ரெம்சிங் பைக்கின் பின்னால் அமர்ந்து கொண்டும் வருவார், அந்த சக ஊழியர் பைக்கை ஒட்டி கொண்டு போவார். அப்போது பின்னில் அமர்ந்து இருந்த பிரேம் சிம்ரன் திடீரென அவரது முதுகில் சாய்ந்து நிலை தடுமாறி தரையில் விழுந்து விடுவார்.
அதனை கண்ட அந்த சக ஊழியர் வண்டியை நிறுத்தி விட்டு, உதவிக்காக நடு ரோட்டில் கையை அசைத்து உதவி கேட்பார், இது அனைத்தும் நாம் அந்த வீடியோவில் காணலாம். அதனை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி பிரேம் சிங்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த சிசிடிவி காட்சிகளை வைத்து குற்றவாளிகள் யார்?, எதற்காக இதை செய்தனர் என மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த மனதை உலுக்கும் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
சென்னை : இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, அசோக் செல்வன், த்ரிஷா, அபிராமி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள "தக்…
சென்னை : தவெக தலைவர் விஜய், கடந்த மார்ச் மாதம் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற இப்தார் நோன்பு…
சென்னை : அதிமுக - பாஜக கூட்டணியை மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா அறிவித்தது தான் அறிவித்தார்.…
திருவள்ளூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவள்ளூர் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டு அங்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில்…
ஏமன் : அமெரிக்க ராணுவம் நேற்று (ஏப்ரல் 17) ஏமனின் ஹொதெய்தா மாகாணத்தில் உள்ள ராஸ் இசா எண்ணெய் துறைமுகத்தின்…