பெப்சி நிறுவனத்தின் விவசாயிகளுக்கு எதிரான வழக்கு! வழக்கை திரும்ப பெற்று கொண்ட கொண்ட பெப்சி நிறுவனம்!
இந்திய பெப்சி நிறுவனம், குஜராத்தைச்சேர்ந்த ஒன்பது விவசாயிகள் மீது அகமதாபாத்திலுள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. அந்த வழக்கில், ” பெப்சி நிறுவனம் காப்புரிமை பெற்றுள்ள எஃப் 5 ரக உருளைக்கிழங்குகளை விவசாயிகள் பயிரிட்டுள்ளதாகவும், அதற்காக ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.” என்றும், வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்நிலையில், பெப்சி நிறுவனத்தின் இந்த வழக்கு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருந்தது. இதனையடுத்து, இதற்கு எதிராக அனைத்து இடங்களிலும் போராட்டங்கள் வெடித்ததை தொடர்ந்து, விவசாயிகள் மீது தொடரப்பட்ட வழக்கை திரும்ப பெறுவதாக பெப்சி நிறுவனம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.