மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஏற்பட்ட பிபார் ஜாய் புயலானது நேற்று (14.06.2023) வடகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் இருந்து வடகிழக்கு திசையில் நகர்ந்து இன்று (15.06.2023) காலை 08:30 மணி அளவில் அதே பகுதிகளில், ஜக்காவு துறைமுகத்திலிருந்து (குஜராத்) மேற்கு – தென்மேற்கே சுமார் 170 கிலோமீட்டர் தொலைவில், தேவ்பூமி துவாரகா (குஜராத்) இருந்து மேற்கே சுமார் 210 கிலோமீட்டர் தொலைவில், போர்பந்தரில் (குஜராத்) இருந்து மேற்கு- வடமேற்கே சுமார் 290 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது.
மேலும் இந்த புயல் வடகிழக்கு திசையில் நகர்ந்து சௌராஷ்டிரா- கட்ச் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பாகிஸ்தான் கடற்கரை பகுதிகளில் இன்று (15.06.2023) மாலை, அதாவது இன்னும் சில மணி நேரத்தில் மிகத்தீவிர புயலாக, மாண்டிவி (குஜராத்) மற்றும் கராச்சி (பாகிஸ்தான்) இடையே, ஜக்காவு துறைமுகம் (குஜராத்) அருகே கரையை கடக்கக்கூடும்.
புயல் கரையை கடக்கும் அச்சமயத்தில் காற்றின் வேகம் மணிக்கு 115-125 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 140 கிலோ மீட்டர் வேகத்திலும் இருக்கக்கூடும். மேலும், இந்த புயல் காரணமாக சௌராஷ்டிரா மற்றும் கட்ச் கடற்கரைகளுக்கு சிவப்பு அலர்ட்டை இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை கொடுத்துள்ளது.
துபாய்: நடிகர் அஜித் குமார் விடாமுயற்சி, குட் பேட் அக்லி படங்களின் படப்பிடிப்பை முடித்துவிட்டு கார் ரேஸில் பங்கேற்க திட்டமிட்டு…
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் எனும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இந்த சொர்க்கவாசல்…
சென்னை: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து 4 வயது சிறுமி பலியானது பெரும்…
சென்னை : மத்திய அரசு வசூல் செய்யும் ஜிஎஸ்டி வரித்தொகையானது, மாதந்தோறும் மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும். அவ்வாறு இன்று டிசம்பர் மாதம்…
கொல்கத்தா: இந்த மாதம் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய வீரர் கே.எல்.ராகுல் பங்கேற்கமாட்டார் என கூறப்படுகிறது.…
வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் எனும் சொர்க்கவாசல் திறப்பு அனைத்து வைணவ ஆலயங்களிலும் கோலாகலமாக திறக்கப்பட்டது. சென்னை…