பொருளாதார அம்சங்களை விட மக்களின் ஆரோக்கியமே முக்கியம்.!

Default Image

வங்கி கடன்களின் வட்டியை தள்ளுபடி செய்யுமாறு உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து வேலைநிறுத்தமும் செய்யப்பட்டுள்ளது. இதனால் பலரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பலர் வங்கிகளில் கடன் வாங்கி வட்டியை கட்ட முடியாமல் அவதி படுகின்றனர். அதனையடுத்து தற்போதுள்ள சூழலை மனதில் கொண்டு ரிசர்வ் வங்கி வட்டியை வழங்க 6 மாதக் காலம் அவகாசத்தை வழங்கியிருந்தது.

இந்த நிலையில் தற்போது உச்சநீதிமன்றம் 6 மாத கடன் தவணைக்கான வட்டியை ரத்து செய்ய கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்ப்பட்டதை அடுத்து இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது ரிசர்வ் வங்கி தரப்பிலிருந்து துஷார் மேதா ஆஜராகி, வட்டியை தள்ளுபடி செய்தால் 2லட்சம் வரை வங்கிகளுக்கு இழப்பு ஏற்படும் என்று தெரிவித்துள்ளார். இதற்கு மனுதாரர் தரப்பில் இருந்து எதிர்ப்பு தெரிவித்து இந்த இக்கட்டான சூழ்நிலைகளில் மக்கள் பல்வேறு வகையிலான பாதிப்புகளை சந்தித்து வரும் போது, வங்கிகளோ லாபத்தை பற்றி பேசுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

இதனையடுத்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் 6 மாத கடன் தவணைக்களுக்காக வட்டி வசூல் செய்வதையும், வட்டிக்கு வட்டி வாங்குவதையும் தவிர்க்க வேண்டும் என்றும், ரிசர்வ் வங்கி இதுகுறித்த அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கூறி வழக்கை ஒத்தி வைத்தனர். மேலும் இந்த இக்கட்டான சூழ்நிலைகளில் மக்களின் ஆரோக்கியமே முக்கியமே, பொருளாதார அம்சங்கள் அல்ல என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்