மக்கள் தொடர்ந்து அதிக வரி செலுத்த வேண்டியிருக்கும் – மத்திய நிதியமைச்சர்

நிதி வருவாயை பெருக்குவதற்காக வரியை உயர்த்தமாட்டோம் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி.
டெல்லி நாடாளுமன்ற மாநிலங்களவையில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அடுத்த 5 ஆண்டுகளுக்கு பெட்ரோல், டீசலுக்காக மக்கள் தொடர்ந்து அதிக வரி செலுத்த வேண்டியிருக்கும். அதாவது, 10 ஆண்டுகளுக்கு முன் காங்கிரஸ் ஆட்சியில் வழங்கப்பட்ட எண்ணெய் கடன் பத்திரங்களை மீட்க தொடர்ந்து செலவிட வேண்டியுள்ளதால் அடுத்த 5 ஆண்டுகளுக்கு பெட்ரோல், டீசலுக்காக மக்கள் தொடர்ந்து அதிக வரி செலுத்த வேண்டியிருக்கும்.
பெட்ரோல், டீசல் விலை 100 ரூபாய்களை கடந்து சென்று கொண்டிருக்க கூடிய நிலையில், இந்த விலையேற்றத்துக்கு காங்கிரஸ் தான் காரணம். விலை உயர்வு இன்னும் 5 ஆண்டுகளுக்கு நீடிக்கும் என தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து பேசிய நிதியமைச்சர், உக்ரைன் போர் மற்றும் எண்ணெய் பத்திரங்கள் மூலம் கடந்த இரண்டு வாரங்களாக உலக எண்ணெய் சந்தைகளில் ஏற்பட்ட இடையூறுகள் எரிபொருள் விலை உயர்வுக்கு காரணம் என்று தெரிவித்தார்.
மேலும், நிதி வருவாயை பெருக்குவதற்காக வரியை உயர்த்தமாட்டோம் என்றும் குறிப்பிட்டார். இதனிடையே, பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து டெல்லியில் காங்கிரஸ் எம்பிக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : சட்டப்பேரவையின் இறுதி நாள் முதல்.., ‘பத்மபூஷன்’ அஜித்துக்கு குவியும் வாழ்த்துக்கள் வரை.!
April 29, 2025
“அந்த பையனுக்கு பயம் இல்ல” கிரிக்கெட் உலகத்தை திரும்பி பார்க்க வைத்த வைபவ்.! மொட்டை மாடி பயிற்சி வீடியோ.!
April 29, 2025
வைரல் வீடியோ: பஹல்காம் தாக்குதலுக்கு ஜிப்லைன் ஆப்ரேட்டர் காரணமா? சுற்றுலா பயணி அளித்த ஆதாரம்.!
April 29, 2025
தீவிரவாத தாக்குதல்…, நடிகர் அஜித் கேட்டு கொண்டது இதைத்தான்!
April 29, 2025
குஜராத்தை கதறவிட்ட 14 வயது சிறுவன்…ராஜஸ்தான் த்ரில் வெற்றி!
April 28, 2025