மத்திய பிரதேச மாநிலத்தில் மழை வேண்டி 6 சிறுமிகளை நிர்வாணமாக நிற்கவைத்து சடங்கு செய்துள்ளனர்.
மத்திய பிரதேச மாநிலம் தாமோ எனும் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் மழை கடவுளை மகிழ்விப்பதற்காகவும், வறட்சி நீங்கி மழை நன்கு பெய்யும் வேண்டும் என்பதற்காகவும் அப்பகுதி மக்கள் ஒரு சடங்கை செய்துள்ளனர். அதில் ஒரு பகுதியாக 6 பெண்களை நிர்வாணமாக நிற்க வைத்துள்ளனர். இந்நிலையில் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, சம்பவ இடத்தில் போலீசார் நடத்திய விசாரணையில் புந்தேல்கண்ட் பிராந்தியத்திலுள்ள தாமோ மாவட்ட தலைமையகத்தில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜபேரா எனும் காவல் நிலையப் பகுதிக்கு உட்பட்ட பனியா எனும் கிராமத்தில் இந்த சடங்கு நடந்ததாக தெரிவித்துள்ளனர். மேலும் மழை இல்லாமல் வறட்சியாக இருப்பதால் மழை கடவுளை மகிழ்விப்பதற்காக இளம் பெண்களை நிர்வாணமாக நிற்க வைத்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், இது குறித்து அப்பகுதி மக்கள் யாரும் புகார் அளிக்கவில்லை எனவும், இவ்வாறு செய்வதன் மூலமாக மழை வரும் என அப்பகுதி மக்கள் நம்புவதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இது போன்ற மூடநம்பிக்கைகள் பயனற்றது என்பது பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த மட்டுமே முடியும் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இது குறித்து அறிக்கையை சமர்ப்பிக்க கோரி தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தாமோ மாவட்ட நிர்வாகத்திடம் கூறியுள்ளது.
நாகை : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
பெங்களூர் : இது தாங்க டீம் என்கிற வகையில் இப்படி ஒரு டீமுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம் என…
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலத்தின் 2-வது மற்றும் கடைசி நாளான இன்று ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில்,…
தூத்துக்குடி : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
சென்னை : இன்று பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் ஒழிப்பு தினம் சர்வதேச அளவில் கடைபிடிக்கப்படுகிறது. இன்றைய தினத்தில் பெண்கள் பாதுகாப்பு…
சென்னை : சினிமாவை பொறுத்தவரையில் நடிகர்களுக்குள் போட்டிகள் இருந்தாலும் அது ஆரோக்கியமான போட்டியாகத் தான் இருக்கும். அந்த போட்டியை சினிமாவை…