வீடெங்கிலும் ஒற்றுமை ஒளியை ஏற்றிய மக்கள்.!
கடந்த 3ம் தேதி பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் அவரது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ பதிவை வெளியிட்டார். அதில் வரும் ஞாயிற்றுக்கிழமை (இன்று) இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் வீட்டின் விளக்கை அனைத்துவிட்டு, டார்ச், அகல் விளக்குகளை ஏற்ற வேண்டும் என வலியுறுத்திருந்தார். அந்த வகையில் பிரதமரின் வலியுறுத்தல்படி தற்போது சரியாக 9 மணி அளவில் நாடு முழுவதும் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் பொதுமக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட அனைவரும் வீடெங்கிலும் ஒற்றுமை ஒளியை ஏற்றினர்.