புதுச்சேரி முதல்வரை சந்தித்த மக்கள் செல்வன் விஜய் சேதுபதி.
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அவர்களை தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வரும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அவர்கள் அவரது இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசியுள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா என மூன்று பேரும் இணைந்து காத்துவாக்குல இரண்டு காதல் என்ற படத்தில் நடித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இப்படத்தின் 80 சதவீத படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் கடைசி கட்ட படப்பிடிப்பு புதுச்சேரியில் நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து, முதல்வர் ரங்கசாமியை சந்தித்து பேசிய விஜய்சேதுபதி அவர்கள், புதுச்சேரியில் படப்பிடிப்புக்கு நாளொன்றுக்கு ரூ.5,000 கட்டணம் வசூலிக்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.28,000 வசூலிக்கப்படுவதாகவும், எனவே சிறிய பட்ஜெட்டில் படம் தயாரிக்கும் நிறுவனங்கள் பாதிக்கப்படுவதாகவும், எனவே கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக பரிசீலனை செய்வதாக முதல்வர் ரங்கசாமி பதிலளித்துள்ளார்.
கொல்கத்தா : இந்திய தேசிய கிரிக்கெட் அணி மற்றும் இங்கிலாந்து தேசிய கிரிக்கெட் அணிக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட…
ஜல்கான்: மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கான் மாவட்டத்தில் நடந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இந்த…
சென்னை: அமைச்சர் தங்கம் தென்னரசு எக்ஸ் தள பதிவை மீண்டும் தனது வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 'நாளை…
சென்னை: நடிகை நயன்தாரா திருமண ஆவணப்படம் தொடர்பாக நடிகர் தனுஷ் ரூ.10 கோடி கேட்டு தொடர்ந்த வழக்கை நிராகரிக்கக் கோரி…
கொல்கத்தா: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய கிரிக்கெட் அணியுடன் 5 டி20 கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடர்,…
ஜல்கான் : மகாராஷ்டிராவின் ஜல்கான் மாவட்டத்தில் நடந்த ரயில் விபத்தில் 6 பேர் உயிரிழப்பு என தகவல் வெளியாகியுள்ளது. தண்டவாளத்தில்…