கொரோனாவால் குணமடைந்தவர்களுக்கு தடுப்பூசி தேவையில்லை -மருத்துவ வல்லுநர்கள் பரிந்துரை..!

Default Image

கொரோனாவால் குணமடைந்தவர்களுக்கு தடுப்பூசி போட தேவையில்லை என  மருத்துவ வல்லுநர்கள் குழு பரிந்துரைத்துள்ளது.

இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலையால் பலர் பாதிக்கப்பட்டு வந்த நிலையில்,  மத்திய, மாநில அரசுகளின் தீவிர நடவடிக்கையால் கொரோனா பாதிப்பு  குறைந்துள்ளது.  கொரோனா கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்திக் கொள்வது சிறந்தது என மத்திய, மாநில மக்களுக்கு அறிவுறுத்தி வருகிறது.

தற்போது இந்தியாவில் கோவிஷீல்ட், கோவாக்சின் மற்றும் ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள்  செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை இந்தியாவில் 24,60,85,649 இதுவரை தடுப்பூசி  செலுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், யாருக்கு தடுப்பூசி தேவை என்று நடத்திய ஆய்வு முடிவுகளை பிரதமருக்கு பல்வேறு அமைப்புகளை சேர்ந்த மருத்துவ வல்லுநர்கள் குழு சமர்ப்பித்துள்ளனர்.

அதில், ஏற்கனவே கொரோனா நோய்க்கு ஆளான அவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது அவசியம் இல்லை என்றும் கொரோனா தொற்று உறுதியான பிறகு தடுப்பூசி செலுத்துவது பயன் தருவதாக உறுதி செய்யப்பட்ட பின்னர் தடுப்பூசி செலுத்தலாம் என்று அவர் ஆலோசனை வழங்கி உள்ளனர். தற்போதைய சூழலில் இளம் வயதினருக்கும் தடுப்பு செலுத்துவது கூடுதல் செலவாகும் என மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்