என்கவுண்டர் செய்த காவலர்களை பாராட்டும் மக்கள்.. ட்விட்டரில் ட்ரெண்டாகும் ஹாஷ்டாகுகள்..!
ஹைதராபாதில் கால்நடை பெண் மருத்துவர் பிரியங்கா ரெட்டி உடல், கடந்த 28ஆம் தேதி பெங்களூர்-ஹைதராபாத் பாலத்தின் கீழ், எறிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சம்பவம், நாடு முழுவதும் பெரிய அதிர்வை ஏற்படுத்தியது.
இதுகுறித்து தெலுங்கானா காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையின் அடிப்படையில், அந்த பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து, எரிக்கப்பட்டது தெரியவந்தது. இந்நிலையில் அவர்கள் நான்கு பெயரை காவல் துறையினர் கைது செய்தனர்.
இந்தநிலையில், இன்று அதிகாலை மூன்று மணியளவில் பிரியங்கா ரெட்டியை எரித்து கொன்ற இடத்தில், அந்த நான்கு பேரையும் காவல் துறையினர் விசாரணைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்கள் தப்பி ஓடிய நிலையில், அவர்களை சுட்டு கொன்றதாக காவல் துறையினர் கூறினார்.
அவர்களை என்கவுன்டர் செய்த போலீசாருக்கு பாராட்டு குவிந்து வருகிறது. மேலும் சமூக வலைதளங்களிலும் போலீசாரின் பணியை பாராட்டி ஹேஷ்டேக்குகளை ட்ரென்ட் செய்து வருகின்றனர்.