இந்த ஆண்டின் முதல் சந்திரகிரகணமானது இன்று பிற்பகல் 3.15 மணியில் இருந்து மாலை 6.22 மணி வரை வானில் தோன்றும்.
சந்திர கிரகணம் என்பது சூரியன்,பூமி,சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வருகின்ற ஒரு நிகழ்வாகும். அந்தவகையில், இந்த ஆண்டின் முதல் சந்திரகிரகணமானது இன்று பிற்பகல் 3.15 மணியில் இருந்து மாலை 6.22 மணி வரை வானில் தோன்றும் என்றும், கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்க முடியும் எனவும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால், மிக நீண்ட சந்திர கிரகணமாக இருக்கும் இந்த கிரகணத்தை, இந்தியாவின் சில பகுதிகளில் மட்டுமே காண முடியும். இந்த கிரகணத்தின் போது நிலவானது அடர்த்தியான சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறத்தில் தோன்றும்.மேலும்,முழு நிலவு பூமியின் நிழலுக்குள் நுழையும் போது, அது பெரியதாகவும் பிரகாசமாகவும் தோன்றும்.
ஏனெனில் பூமிக்கு மிக அருகில் நிலவு வரும் போது வளிமண்டல ஒளிச் சிதறல் ஏற்படும். இதன் காரணமாகவே நிலவின் நிறம் ரத்தச் சிவப்பாக மாறும். இதனை ஆங்கிலத்தில் “Blood Moon” என்று அழைக்கின்றனர். இதனால், 2021 ஆம் ஆண்டின் வானியல் அதிசயமாக இந்த சந்திர கிரகணம் இருக்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மும்பை : மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. அதில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகியுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த…
சென்னை : ஆர்.ஜே.பாலாஜியின் சொர்கவாசல் திரைப்படம் வெளியாக இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், படத்தின் முதல் டிரெய்லரை படக்குழுவினர்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாநாடு வெற்றிகரமாக கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில்…
சென்னை : நேற்று (22-11-2024) ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில்…
சென்னை : திருச்செந்தூர் முருகன் கோயில் யானை தெய்வானை , கடந்த நவம்பர் 18ஆம் தேதியன்று, பாகன் உதயகுமார் மற்றும்…