சீன உணவுகளை புறக்கணிக்க வேண்டும் – மத்திய அமைச்சர் வேண்டுகோள்
சீன உணவுகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.
லடாக்கின் கால்வன் பள்ளத்தாக்கில், திங்கட்கிழமை இரவு இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய ராணுவம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது. மேலும் சீன ராணுவ தரப்பில் சுமார் 43 வீரர்கள் பலத்த காயம் அடைந்துள்ளனர் அதில் பலர் உயிரிழந்திருக்க கூடும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.இதனால் இந்தியா மற்றும் சீனா இடையே தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.இதன் விளைவாக நாளை பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு இடையில் தான் சீனா தயாரிப்புகளை கைவிட வேண்டும் என்று இந்தியர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே அளித்த பேட்டி ஒன்றில்,சீன உணவுகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.ஓட்டல்களில் சீன உணவு வகைகளை விற்பனை செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.