பிரதமர் மோடி, கொரோனா நிலவரம் கொரோனா தடுப்பூசி பணிகள் மற்றும் மருந்துகள், ஆக்சிஜன் கையிருப்பு போன்றவை குறித்து ஆய்வு நடத்தினார்.
இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை மிகவும் தீவிரமாக பரவி வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மத்திய அமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், கொரோனா நிலவரம் கொரோனா தடுப்பூசி பணிகள் மற்றும் மருந்துகள், ஆக்சிஜன் கையிருப்பு போன்றவை குறித்து ஆய்வு நடத்தினார்.
அவர் பேசுகையில், ஒவ்வொரு மாநிலங்களிலும் வீணாகும் தடுப்பூசியின் அளவு குறித்து கேட்டறிந்தார். இதுவரை 17.7 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டிருப்பதாகவும், 45 வயதுக்கு மேற்பட்ட பிரிவினரில் 31 சதவீதம் பேர் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டிருப்பதாகவும் பிரதமரிடம் தெரிவித்துள்ளனர்.
மேலும், வைரஸ் பரவாமல் தடுக்க விரைவான மற்றும் முழுமையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்தார். 1 லட்சத்துக்கு மேற்பட்ட நோயாளிகளை கொண்டிருக்கும் 12 மாநிலங்கள் மற்றும் அதிக பாதிப்புகளை கொண்டிருக்கும் மாவட்டங்கள் குறித்தும் கேட்டறிந்தார்.
இந்த கூட்டத்தில், யூனியன் அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிர்மலா சீதாராமன், ஹர்ஷ் வர்தன், பியூஷ் கோயல், மன்சுக் மண்டவியா ஆகியோர் கலந்து கொண்டனர்.
டெல்லி : உடல் நலக்குறைவால் நடிகர் டெல்லி கணேஷ் நேற்று இரவு தூங்கிக் கொண்டிருக்கும் போதே உயிரிழந்தார். அவரது மறைவு…
பலுசிஸ்தான் : நேற்று காலை 9 மணி அளவில் பலுசிஸ்தானில் அமைந்துள்ள குவெட்டா ரயில் நிலையத்தில் பயங்கர குண்டுவெடிப்பு சம்பவம்…
சென்னை : புஷ்பா படத்தின் முதல் பாகத்தில் இடம்பெற்று இருந்த "ஓ சொல்றியா மாமா" பாடல் மிகப்பெரிய ஹிட்டாகி படத்தின்…
மும்பை : பொதுவாகவே, சினிமா துறையிலும் சரி, விளையாட்டுத் துறைகளிலும் சரி சில பிரபலங்கள் தங்களுடைய குழந்தைகளின் முகத்தை ஊடகத்திற்கு…
சென்னை : வரும் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையிலும், அந்த தேர்தலில் தேமுதிக கட்சியின் கட்டமைப்பைப் மேம்பபடுத்துவது தொடர்பாக…
சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே,…