மேற்கு வங்கத்தில் வெறுப்பு அரசியலை வீழ்த்திய மனசாட்சியுள்ள மக்கள், மம்தா பானர்ஜியின் போராட்டம், அர்ப்பணிப்பான தலைவர்கள், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொண்டர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.
மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. அங்கு 294 தொகுதியில் 292 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் இந்த 292 தொகுதிகளிலும் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 202 தொகுதிகளில் முன்னிலையில் இருந்து வருகிறது. மேலும் பாஜக 78 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது .
மம்தா பானர்ஜியின் இந்த மிகப்பெரிய வெற்றிக்கு அரசியல் பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். அந்தவகையில் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் டுவிட்டரில் மம்தா பானர்ஜிக்கு வாழ்த்து தெரிவித்து ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார்.
அதில் ‘மேற்கு வங்கத்தில் வெறுப்பு அரசியலை வீழ்த்திய மனசாட்சியுள்ள மக்கள், மம்தா பானர்ஜியின் போராட்டம், அர்ப்பணிப்பான தலைவர்கள், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொண்டர்களுக்கு எனது வாழ்த்துக்கள். தி ஓ தீதி (சகோதரி ஒய் சகோதரி) என்று கிண்டலாகப் பேசிய பாஜகவுக்கு இந்த வெற்றி தகுந்த பதிலடி.’ என்று பதிவிட்டுள்ளார்.
டெல்லி : வரும் 2036-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த சர்வதேச ஒலிம்பிக்…
சென்னை : இந்திய ராணுவத்தின் ராஜ்புத் ரெஜிமென்ட்டில் அதிகாரியாக இருந்த மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை கதையை மையமாக வைத்து…
சென்னை -90 கிட்ஸ்க்கு பிடித்த பெட்டிக்கடை தேன் மிட்டாய் சுலபமான முறையில் வீட்டிலேயே செய்வது எப்படி என இந்த செய்தி…
திருவாரூர் : உலக நாடுகள், உலக மக்கள் என அனைவரும் பெரிதளவு எதிர்பார்க்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்னும் சற்று…
சென்னை : சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம்.…
திருச்சி : ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு, தவெக மாநாடு என தமிழக அரசியல் வட்டாரத்தில் கூட்டணி ஆட்சி குறித்தும்,…