மக்கள் பயப்பட தேவையில்லை. ஆனாலும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். – மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா.
கொரோனாவின் தாக்கம் தற்போது அண்டை நாடான சீனா உள்ளிட்ட ஒரு சில நாடுகளில் அதிகரிக்க தொடங்கியுள்ளதால், இந்தியாவில் மத்திய அரசின் அறிவுறுத்தலின் பெயரில் பல்வேறு மாநிலங்களில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
நேற்று மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் , மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா மாநிலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், கொரோனாவில் புதிய பரிமாணம் பற்றியும் ஆலோசனை நடத்தினர்.
அந்த ஆலோசனை முடிந்த பிறகு , மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறுகையில், ‘ மக்கள் பயப்பட தேவையில்லை. ஆனாலும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.’ என குறிப்பிட்டார்.
மேலும், மாநிலங்களில் கொரோனா பரிசோதனையை அதிகரிப்பதன் மூலம், புதிய கொரோனா மாறுபாடுகள், அதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கண்டுகொண்டு அதனை பின்பற்றலாம் என மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா வலியுறுத்தினார்.
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே டி20 தொடர் கடந்த 1 வாரமாக நடைபெற்று வருகிறது. அந்த…
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…