இத்தன நாளா இது தெரியாம போச்சே ..!! இந்த திட்டங்களை பத்தி தெரிஞ்சிக்கோங்க மக்களே…!
தபால் அலுவலக திட்டங்கள்: தபால் அலுவலக திட்டங்கள் மூலம் நீங்கள் பணத்தை டெபாசிட் செய்தால், வட்டியின் மூலம் உங்களுக்கு பணம் கிடைக்கும். அது என்னென்ன திட்டங்கள் என்று பார்ப்போம்.
நாம் ஒரு பெரிய தொகையை கையில் வைத்து அதை வங்கியிலோ, அல்லது வீட்டிலோ வைத்திருப்பதற்கு பதிலாக இது போன்ற அரசாங்கத்தை மையமாக கொண்டு இயங்கும் அலுவலகங்களில் அதனை போட்டு வைத்தால் அதன் மூலம் நமக்கு ஒரு வட்டி விகிதம் படி மாதம் தோறும் நமக்கு அது வருமானத்தையும் பெற்று தரும்.
நம்மில் சிலருக்கு இந்த திட்டங்களை பற்றி தெரிந்திருக்கலாம், அல்லது தெரியாமலும் இருக்கலாம், இருப்பினும் இதை நமக்கு லாபம் ஈட்டி தரும் திட்டங்களை பற்றியும் அவற்றின் வட்டியின் விகிதத்தை பற்றியும் தெளிவாக பார்க்கலாம்.
தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம் (POMIS)
இந்த திட்டம் என்பது நிதி அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்டு சரிபார்க்கப்பட்ட முதலீட்டுத் திட்டமாகும். இதில் முன்பு 6.6 % வட்டி விகிதத்துடன் இருந்த நிலையில் தற்போது இந்த திட்டத்தின் உங்களுக்கு 7.4 % சதவீத வட்டி வழங்கப்படுகிறது. மேலும், அந்த வட்டியானது மாதம் மாதம் நமக்கு கிடைத்து விடும்.
ஒரு பெரிய தொகையை இதில் முதலீடு செய்யும் பட்சத்தில் அதற்கான வட்டி விகிதம் மாதம்தோறும் பெரிய பணத்தொகையாகவே நமக்கு கிடைத்துவிடும்.
தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டம் (NSC)
NSC எனப் பிரபலமாக எல்லாருக்கும் தெறித்த இந்த திட்டம் 5 ஆண்டு கால வைப்புத் திட்டமாகும். இந்த திட்டத்தில், உங்களுக்கு 7.7 % சதவீத வட்டி வழங்கப்படுகிறது. மேலும், ஒரு மொத்த பெரிய தொகையை இதில் டெபாசிட் செய்வதன் மூலம், 5 ஆண்டுகளில் அதன் மூலம் நல்ல பணம் நாம் சம்பாதிக்கலாம்.
இந்த திட்டம் கூட்டு வட்டி என்ற அடிப்படையில் செயல்படுகிறது. இதில் நாம் சம்பாதித்த வட்டி ஆண்டு தோறும் மறு முதலீடு செய்யப்பட்டு, முதிர்வு காலத்தில் ஒட்டுமொத்த தொகையாக வழங்கப்படும்.
PPF திட்டம்
நீண்ட காலத்திற்கு முதலீடு செய்ய விரும்புவர்களுக்கு இந்த PPF திட்டம் என்பது ஒரு சிறந்த திட்டமாகும். இந்த திட்டத்தில், நீங்கள் மூன்று வழிகளில் வரிச் சலுகைகளையும் பெறுவீர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இதில் 7.1 % சதவீத வட்டி வழங்கப்படுகிறது.
இந்த முதலீட்டை மொத்தமாகவும் அல்லது தவணை அடிப்படையில் கொடுக்கலாம். குறிப்பாக, ஒரு தனிநபர் ஒரு PPF கணக்கில் 12 வருட தவணை செலுத்துவதற்கு மட்டுமே தகுதியுடையவர் ஆவார்.
மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் திட்டம்
இந்தத் திட்டம் என்பது பெண்களுக்காக மட்டுமே செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தில், 2 ஆண்டுகளுக்கு பணம் டெபாசிட் செய்யலாம். மேலும், தற்போது இத்திட்டத்திற்கு 7.5% சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.
இதை அரசாங்கத்தின் சிறு சேமிப்புத் திட்டம் என்றும் கூறலாம். சிறுக சிறுக சேமிக்கும் பெண்களுக்கு இந்த திட்டம் உபயோகமாக இருக்கும் என்றும் மேலும் இது இந்தியப் பெண்களிடையே சேமிப்புப் பழக்கத்தை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டு வந்த திட்டமாகும். இந்த திட்டத்திற்கு எந்த ஒரு வயது வரம்பும் கிடையாது.