புதிய இந்தியாவை உருவாக்குவதற்கு மக்கள் எங்களுக்கு அதிகாரம் அளித்துள்ளனர்-பிரதமர் நரேந்திர மோடி
புதிய இந்தியாவை உருவாக்குவதற்கு மக்கள் எங்களுக்கு அதிகாரம் அளித்துள்ளனர் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பிரான்சில் ஜி-7 மாநாடு நடைபெறுகிறது.இதற்காக பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸ் சென்றுள்ளார்.பாரிஸ் விமான நிலையத்திற்கு சென்ற அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனையடுத்து பிரான்ஸ் வாழ் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.அவரது உரையில்,உலகிலேயே மிகப்பெரிய மருத்துவ திட்டத்தை இந்தியா செயல்படுத்தி வருகிறது.2025-ம் ஆண்டில் காசநோய் இல்லா இந்தியா உருவாக்கப்படும்.
தீவிரவாதத்தை இந்தியா இரும்பு கரம் கொண்டு ஒடுக்கி வருகிறது.பாரீஸ் பிரகடன இலக்கை அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்குள் இந்தியா எட்டும்.கடினமான முடிவுகளை அடுத்தடுத்து எடுத்து வருகிறோம் .ஊழல்வாதிகள் அரசின் நடவடிக்கைக்கு பயந்து ஓடி ஒளிந்து வருகின்றனர்.புதிய இந்தியாவை உருவாக்குவதற்கு மக்கள் எங்களுக்கு அதிகாரம் அளித்துள்ளனர். முடியாது என நினைத்த பலவற்றை, அடைவதற்கான இலக்குகளாக நிர்ணயித்துள்ளோம் என்று உரையாற்றினார்.