மக்களே உஷார்.!! சிறுமிக்கு முதல் பறவை காய்ச்சல் ..எச்சரிக்கை விடுத்த சுகாதார அமைப்பு!

Bird Flu

மேற்கு வங்கம்: மேற்கு வங்கத்தில் உள்ள 4 வயது சிறுமிக்கு தற்போது பறவை காய்ச்சல் பரவி இருப்பதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.

பறவை காய்ச்சல் எனப்படும் H9N2 கிருமியானது காற்றின் மூலம் பரவக்கூடிய ஒன்றாகும். இது பெரும்பாலும் பறவைகளிலிருந்து சில நேரம் விலங்குகளுக்கும், சில நேரங்களில் இது மனிதனுக்கும் பரவக்கூடிய தன்மை கொண்டதாகும். இந்த H9N2 கிருமி தான் அந்த 4 வயது சிறுமிக்கு தொற்று விளைவித்துள்ளது.

அந்த சிறுமியின் வீட்டுக்கு அருகில் உள்ள ஏதேனும் பண்ணைகளிலிருந்து இந்த தொற்று பரவியிருக்கலாம் என உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது. மேலும், சிறுமியுடன் இருந்த குடம்பத்தினருக்கோ அல்லது அந்த சிறுமிக்கு சிகிச்சை அளித்த மருத்துவருக்கோ எந்த தொற்றும் ஏற்படவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

கடந்த பிப்ரவரி மாதம் தீவிர காய்ச்சலால் அவதி பட்டு வந்த 4 வயது சிறுமிக்கு இந்த பறவை காய்ச்சல் தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைப்பு உறுதி செய்துள்ளது. இதனால், கடந்த 2019-ம் ஆண்டுக்கு பிறகு இந்தியாவில் பறவை காய்ச்சல் தொற்றை 2-வது முறையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.

மேலும், அதீத காய்ச்சல் மற்றும் வயிற்று கோளாறால் 3 மாதங்கள் அவதி பட்டு வந்து அந்த சிறுமி தற்போது நலம் பெற்று மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனால், அதிக இடங்களில் இது போல உருவாகி வரும் தொற்று குறித்து உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளதோடு, அதற்கென தேவையான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளையும் எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்