மக்களே ஜாக்கிரதை.! ஆன்லைனில் மளிகைப் பொருட்களை விற்கும் ஜியோ மார்ட்டின் பெயரில் போலி வெப்சைட்.!
ஆன்லைனில் மளிகைப் பொருட்களை விற்கும் ஜியோ மார்ட்டின் வணிக தளத்தின் பெயரில் போலி வெப்சைட் இயங்கி வருவதாகவும், எனவே மக்கள் ஏமாறாமல் ஜாக்கிரதையாக இருக்க ரிலையன்ஸ் வலியுறுத்தி உள்ளது.
இன்றைய காலகட்டத்தில் எல்லாமே டிஜிட்டல் முறையில் முன்னேறி வருகிறது. ஒவ்வொரு விஷயமும் ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ஆன்லைனில் மளிகைப் பொருட்களை விற்கும் பிரபல வணிக தளம் என்பது ஜியோ மார்ட்டாகும். தற்போது இதன் பேரில் போலி இணையதளங்கள் இயங்கி வருவதாக தகவல்கள் வெளியானதை அடுத்து ரிலையன்ஸ் சில்லறை வர்த்தக நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு மக்களை ஜாக்கிரதையாக இருக்க வலியுறுத்தி உள்ளது.
அந்த அறிக்கையில், ஜியோ மார்ட் வணிக தளத்தின் பெயரில் போலி இணையதளங்கள் பல இயங்கி வருவதாகவும், எனவே வாடிக்கையாளர்கள் யாரும் ஏமாற கூடாது என்றும், ஜாக்கிரதையாக இருங்கள் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் ஜியோ மார்ட்டின் தரப்பில் இருந்து விநியோகஸ்தர்களுக்கோ, உரிமையாளர்களுக்கோ எந்த மாதிரி உரிமமும் இதுவரை யாருக்கும் வழங்கப்படவில்லை என்றும், அவ்வாறு உரிமங்கள் வழங்குவதாக கூறி எந்த வாடிக்கையாளர்களிடமிருந்தும் தொகை எதுவும் வசூலிக்கப்படவில்லை என்றும், எனவே மக்கள் ஏமாறாமல் ஜாக்கிரதையாக இருங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.