மக்களே ஜாக்கிரதையா இருங்க..! மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று..!
இந்தியாவில் கடந்த ஒரே நாளில் 1,086 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த ஒரே நாளில் 1,086 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால் நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,30,30,925 ஆக பதிவாகியுள்ளது.
அதுமட்டுமில்லாமல் கடந்த ஒரே நாளில் 1,198 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். மேலும், இந்தியாவில் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 42,497,567 ஆக அதிகரித்துள்ள நிலையில், கொரோனாவுக்கு 71 பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர். இதுவரை மொத்த பலியானவர்களின் எண்ணிக்கை 5,21,487 ஆக பதிவாகியுள்ளது.
நாட்டில் இதுவரை 1,85,04,11,569 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றும் இந்தியாவில் ஒரேநாளில் 15,49,699 கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது எனவும் மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.