ஏற்கனவே கொரோனா வைரஸ் உலகம் முழுவதிலும் உள்ள பலரையும் வருத்தி வரும் நிலையில், தற்பொழுது புதிது புதிதாக நோய்கள் பல்வேறு பகுதிகளிலும் பரவி வருகிறது. அந்த வகையில் தற்பொழுது ஜிகா மற்றும் டெங்கு ஆகிய பூச்சிகளால் பரவக்கூடிய நோய் கிருமிகள் அடுத்த தொற்றுநோயாக உருவாக வாய்ப்புள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
அதாவது வெப்ப மண்டல மற்றும் துணை வெப்ப மண்டலப் பகுதியில் வாழக்கூடிய 4 பில்லியன் மக்களுக்கு இதனால் அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள தகவலின்படி, 130 நாடுகளில் ஆண்டுதோறும் 390 மில்லியன் மக்களுக்கு டெங்கு பாதிப்புகள் ஏற்படுவது மட்டுமல்லாமல், 89 நாடுகளில் ஜிகா பரவல் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
மஞ்சள் காய்ச்சல், மஞ்சள் காமாலை, ரத்த காய்ச்சல் மற்றும் டெங்கு போன்ற மரணத்தை ஏற்படுத்த கூடிய வைரஸ்கள் உலக நாடுகளில் பரவி வருவது அதிகரித்து வருகிறது என்பதற்கான அறிகுறிகள் தற்போது தீவிரமடைந்து கொண்டே செல்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்,இரண்டு ஆண்டுகளாக கொரோனா பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் இந்த புதிய வைரஸ் அடுத்த தொற்று நோய்க்கு காரணமாக உருவாகலாம் எனவும், இதற்கான அறிகுறிகள் தங்களிடம் உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ராஜ்கோட் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர் மற்றும் 3…
சென்னை : இந்த வருடத்தின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடரின் போது கடந்த ஜனவரி 11-ல் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய…
சென்னை : வெளிநாடு வேலைவாய்ப்பு என ஒரு சில தனியார் நிறுவனங்களில் அதிக பணம் செலுத்தி ஏமாற்றம் அடைந்தவர்கள் இங்கு…
ராஜ்கோட் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட்…
சென்னை : இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா உள்ளிட்டோர் நடிக்கும் ‘SK 25'…
குஜராத் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான, 3-வது டி20 போட்டி ராஜ்கோட்டில் இன்று இரவு 7 மணிக்கு…