மக்களே எச்சரிக்கை .., பூச்சிகளால் உருவாகும் அடுத்த தொற்றுநோய் – WHO எச்சரிக்கை..!
ஏற்கனவே கொரோனா வைரஸ் உலகம் முழுவதிலும் உள்ள பலரையும் வருத்தி வரும் நிலையில், தற்பொழுது புதிது புதிதாக நோய்கள் பல்வேறு பகுதிகளிலும் பரவி வருகிறது. அந்த வகையில் தற்பொழுது ஜிகா மற்றும் டெங்கு ஆகிய பூச்சிகளால் பரவக்கூடிய நோய் கிருமிகள் அடுத்த தொற்றுநோயாக உருவாக வாய்ப்புள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
அதாவது வெப்ப மண்டல மற்றும் துணை வெப்ப மண்டலப் பகுதியில் வாழக்கூடிய 4 பில்லியன் மக்களுக்கு இதனால் அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள தகவலின்படி, 130 நாடுகளில் ஆண்டுதோறும் 390 மில்லியன் மக்களுக்கு டெங்கு பாதிப்புகள் ஏற்படுவது மட்டுமல்லாமல், 89 நாடுகளில் ஜிகா பரவல் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
மஞ்சள் காய்ச்சல், மஞ்சள் காமாலை, ரத்த காய்ச்சல் மற்றும் டெங்கு போன்ற மரணத்தை ஏற்படுத்த கூடிய வைரஸ்கள் உலக நாடுகளில் பரவி வருவது அதிகரித்து வருகிறது என்பதற்கான அறிகுறிகள் தற்போது தீவிரமடைந்து கொண்டே செல்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்,இரண்டு ஆண்டுகளாக கொரோனா பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் இந்த புதிய வைரஸ் அடுத்த தொற்று நோய்க்கு காரணமாக உருவாகலாம் எனவும், இதற்கான அறிகுறிகள் தங்களிடம் உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.