மக்களே ஜாக்கிரதை…50 ஆயிரத்தை தாண்டிய கொரோனா சிகிச்சை!
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்று 8,084 ஆக இருந்த நிலையில்,கடந்த ஒரே நாளில் 6,594 ஆக குறைந்துள்ளது.இதனால் நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,32,36,695 ஆக பதிவாகியுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
- மேலும்,கொரோனா இறப்பு எண்ணிக்கை நேற்று 10 ஆக பதிவாகிய நிலையில்,கடந்த 24 மணி நேரத்தில் 6 ஆக குறைந்துள்ளது. மேலும்,இதுவரை மொத்த பலியானவர்களின் எண்ணிக்கை 5,24,777 ஆக பதிவாகியுள்ளது.
- அதைப்போல,கடந்த ஒரே நாளில் 4,035 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து உள்ளனர்.மேலும்,இந்தியாவில் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,26,61,370 ஆக பதிவாகியுள்ளது.அதன்படி,மீட்பு விகிதம் தற்போது 98.68% ஆக அதிகரித்துள்ளது.
- இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 50,548 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- நாட்டில் இதுவரை 1,95,35,70,360 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றும்,இந்தியாவில் ஒரே நாளில் 14,65,182 கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது எனவும் மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.