திடீரென நுழைந்த 2 சிறுத்தைகள்…10 மாடுகளை கொன்றதால் மக்கள் அதிர்ச்சி!!

leopards

ஹரியானா : குருகிராமில் உள்ள திக்லி கிராமத்தில் சிறுத்தைகள் பசுவை தாக்கி கொன்ற சம்பவம் அப்பகுதியில் உள்ள மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரவில் திடீரென மாட்டு தொழுவில்  புகுந்த அந்த சிறுத்தைகள் இறைக்காக பசு மாடுகளை கொன்றது  அப்பகுதியில் உள்ள கால்நடைகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பான காட்சிகள் மாட்டு சந்தையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவில் பதிவாகி இருக்கிறது. வீடியோவில் இரண்டு சிறுத்தைகள் மாட்டு  தொழுவிற்குள் புகுந்து அங்கிருந்த 10 மாடுகளை கொன்றது. மிச்சம் கிடைத்த மாடுகளின் உடல்களும் வீடியோ காட்சியில் பதிவாகி இருக்கிறது.

இந்த சம்பவத்தையடுத்து, வனத்துறையினர் சம்பவ இடத்தை ஆய்வு செய்து, அப்பகுதியில் இரண்டு சிறுத்தைப்புலிகள் நடமாடியதை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “மாட்டுத்தாவணி நிர்வாகத்திடம் அதன் எல்லை சுவரின் உயரத்தை உயர்த்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்து . அந்த இரண்டு சிறுத்தைகளை பிடிக்க வலைகள் அமைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

திறந்தவெளி பகுதி என்பதால் சிறுத்தைப்புலிகள் பிடிபடுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. இருந்தாலும், நாங்கள் சிறுத்தையை பிடிக்க கண்டிப்பாக கூண்டுகள் அமைப்போம்” எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், பல வன விலங்குகளின் இருப்பிடமான ஆரவல்லி மலைத்தொடரைச் சுற்றியுள்ள பகுதிகளில் இதேபோன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே, முன்னதாக இப்பகுதியில் சிறுத்தைகள் நடமாடும் தகவல் வெளியாகி இருந்த நிலையில், தற்போது மாட்டு சந்தைக்குள் புகுந்து 10 மாடுகளை கொன்றது  அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்