மக்களே உஷார்: ஆகஸ்டில் 15 நாட்களுக்கு வங்கிகள் இயங்காது – ரிசர்வ் வங்கி அறிவிப்பு!!
ஆகஸ்ட் மாதத்தில் தனியார் மற்றும் அரசு வங்கிகள் மொத்தம் 15 நாட்கள் இயங்காது என்ற இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இந்த மாதத்திற்கு ஏதேனும் வங்கி தொடர்பான பணிகள் திட்டமிடப்பட்டிருந்தால், உங்கள் வங்கிக்குச் செல்வதற்கு முன்பு ஆகஸ்ட் மாதத்தில் இந்த வங்கி விடுமுறை பட்டியலை நீங்கள் சரிபார்க்க வேண்டும். இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பின்படி, ஆகஸ்ட் மாதத்தில் தனியார் மற்றும் அரசு வங்கிகள் மொத்தம் 15 நாட்கள் இயங்காது என்றும் இதில் 2வது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை உட்பட அடங்கும்.
ரிசர்வ் வங்கியின் நாள்காட்டியின்படி, ஞாயிற்றுக்கிழமை மற்றும் ஆகஸ்ட் மாதம் இரண்டாவது, நான்காவது சனிக்கிழமை காரணமாக வங்கிகள் 6 நாட்களுக்கு இயங்காது. இதுபோன்று வங்கிகள் 9 நாட்களுக்கு மூடப்படும். இந்த விடுமுறைகள் நாடு முழுவதும் ஆனால் ஒரு சில மாநிலங்களில் பொருந்தாது. இதன் அடிப்படையில் மொத்தம் 15 நாட்களுக்கு வங்கிகள் இயங்காது.
ஆகஸ்ட் மாதத்தில் வங்கி விடுமுறைகளின் முழுமையான பட்டியல்:
ஆகஸ்டில் வங்கிகள் வார விடுமுறை நாட்கள் :
- ஆகஸ்ட் 1 – ஞாயிறு
- ஆகஸ்ட் 8 – ஞாயிறு
- ஆகஸ்ட் 14 – இரண்டாவது சனி
- ஆகஸ்ட் 15 – ஞாயிறு
- ஆகஸ்ட் 22 – ஞாயிறு
- ஆகஸ்ட் 28 – நான்காம் சனி
- ஆகஸ்ட் 29 – ஞாயிறு
ஆகஸ்ட் மாதத்தில் வரும் பண்டிகை விடுமுறை நாட்கள் :
- 13 ஆகஸ்ட் 2021 – வெள்ளிக்கிழமை, தேசபக்தர் தினம்
- 16 ஆகஸ்ட் 2021 – திங்கள், பார்ஸ் புத்தாண்டு, (பெலாப்பூர், மும்பை, நாக்பூர், மகாராஷ்டிரா)
- 19 ஆகஸ்ட் 2021 – வியாழக்கிழமை, மொகரம் (அசூரா) (அகமதாபாத், பெலாப்பூர், போபால், ஹைதராபாத், ஜெய்ப்பூர், ஜம்மு, கான்பூர், கொல்கத்தா, லக்னோ, மும்பை, நாக்பூர், டெல்லி, பாட்னா, ராய்ப்பூர், ராஞ்சி, ஸ்ரீநகர்)
- 20 ஆகஸ்ட் 2021 – வெள்ளிக்கிழமை, மொகரம் / முதல் ஓணம் (பெங்களூர், சென்னை, கொச்சி மற்றும் கேரள மண்டலம்)
- 21 ஆகஸ்ட் 2021 – சனிக்கிழமை, திருவனம், (கொச்சி, கேரளா)
- 23 ஆகஸ்ட் 2021 – திங்கள், ஸ்ரீ நாராயண குரு ஜெயந்தி, (கொச்சி, கேரளா)
- 30 ஆகஸ்ட் 2021 – திங்கள், ஜன்மாஷ்டமி (ஷ்ரவன் வாட் -8) / கிருஷ்ண ஜெயந்தி
- 31 ஆகஸ்ட் 2021 – செவ்வாய், ஸ்ரீ கிருஷ்ணா ஜெயந்தி, (ஐதராபாத்)
சுதந்திர தினம் (ஆகஸ்ட் 15) மற்றும் ராக்ஷாபந்தன் (ஆகஸ்ட் 22) இந்த முறை ஒரு ஞாயிற்றுக்கிழமை என்பதால், இந்த இரண்டு சந்தர்ப்பங்களுக்கும் கூடுதல் விடுமுறை இருக்காதுஎன்றும் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.