அக்டோபர் 1-ம் தேதி முதல் ATM-ல் பணம் இல்லையென்றால் அபராதம்….! ரிசர்வ் வங்கி அதிரடி…!
அக்டோபர் 1-ம் தேதி முதல் ATM-ல் பணம் இல்லையென்றால் அபராதம் விதிக்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிவிப்பு.
இன்று அதிகமானோர் ஏடிஎம் மூலமாக தான் பணம் எடுப்பதுண்டு. அந்த வகையில், பல இடங்களில் ஏடிஎம் இருந்தாலும், ஏடிஎம்களில் பணம் இருப்பதில்லை. இந்நிலையில், இந்திய ரிசர்வ் வங்கி, அக்டோபர் 1-ம் தேதி முதல் ATM-ல் பணம் இல்லையென்றால், வங்கிகளுக்கும், வொயிட் லேபிள் நிறுவனங்களுக்கும் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஒரு மாதத்தில் 10 மணி நேரத்துக்கும் மேல் பணம் இல்லை எனில் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றும், ஒருவேளை ஏடிஎம்மில் பணம் இல்லை எனில், அந்த ஏடிஎம் மையத்திற்கு பணத்தை விநியோகம் செய்யும் வங்கிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த அபராதத் தொகையை சம்பந்தப்பட்ட வங்கிகள் விரும்பினால் வொயிட் லேபிள் நிறுவனத்திடமிருந்து வசூலித்துக் கொள்ளலாம் என்றும், ஒருவேளை ஏடிஎம்களின் செயலிழப்பு குறித்து வங்கிகள் முறையான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏடிஎமில் எவ்வளவு நேரம் பணம் இல்லை எனும் தகவலை ரிசர்வ் வங்கிக்கு அறிக்கை மூலம் தெரிவிக்க வேண்டும் என்றும், எந்த பகுதியில் எந்த ஏடிஎம்மில் பணம் இல்லை என விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறை வொயிட் லேபிள் நிறுவனத்திற்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏடிஎம்களில் பணம் இல்லாமல் இருப்பதற்கு அபராதம் விதிக்கப்படும் திட்டமானது, பொதுமக்களுக்கு போதுமான பணம் கிடைப்பதை உறுதி செய்வதற்காக தான் நடைமுறைப்படுத்தபடவுள்ளது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.