ஹெல்மெட் அணியாததால் அபராதம்…! அதிர்ந்து போன பஸ் டிரைவர்..!

Default Image

இந்திய முழுவதும் புதிய திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வந்து உள்ளது. இதனால் நாடு முழுவதும் வாகனம் ஓட்டுபவர்கள் விதியை மீறினால் அபராதம் விதிக்கப்படுகிறது.

இந்நிலையில் உத்தர பிரதேசம் மாநிலத்தின் நொய்டா  சேர்ந்த நிரன்கர் சிங். இவர் பள்ளிகள் மற்றும் தனியார் நிறுவனகளுக்கு வாடகைக்கு பஸ்கள் இயக்கும் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.  கடந்த 11-ம் தேதி நிரன்கர் சிங்கிற்கு  போக்குவரத்து துறை சார்பில் ஆன்லைனில் அபராதம் செலுத்த சலான் ஒன்றை அனுப்பி உள்ளது.

அபராததிற்கான காரணத்தை பார்த்து நிரன்கர் சிங் அதிர்ந்து போனார். இவர் நிறுவனத்தில் வேலை பார்க்கும் டிரைவர் ஒருவர் ஹெல்மெட் அணியாமல் பஸ் ஓட்டியதாகவும் அதற்காக ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டு இருந்தது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்