இனி குடித்து விட்டு வாகனம் ஓட்டினால் அபராதம் 2,000லிருந்து10,000 ஆக உயர்வு..!

Default Image

தானேவில் அடுத்த வாரம் முதல் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதற்கான அபராதத்தை 2,000லிருந்து 10,000 ஆக உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டில், மத்திய அரசு மோட்டார் வாகனச் சட்டத்தில் பல திருத்தங்களைச் செய்தது. அதன்படி கிட்டத்தட்ட அனைத்து விதிமீறல்களுக்கும் அபராதம் அதிகரிக்கப்பட்டது. பல்வேறு மாநிலங்களின் அரசுகள் தங்கள் விருப்பப்படி இந்தத் திருத்தங்களைச் செய்தனர். ஆனால், மகாராஷ்டிர அரசு இந்தத் திருத்தங்களை அமல்படுத்துவதை நிறுத்தி வைத்தது.

இந்த ஆண்டு ஜனவரியில் முதல்  மகாராஷ்டிராவில் திருத்தங்கள் விரைவில் செயல்படுத்தப்படும் என்று  போக்குவரத்து அமைச்சர் அனில் பராப் கூறியிருந்தார். அதன்படி, டிசம்பர் 1 அன்று குடிபோதையில் வாகனம் ஓட்டுவதற்கான அபராதத்தை உயர்த்தி மாநில அரசு உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிறகு தானே போக்குவரத்து காவல்துறை புதிய அபராதத் தொகையை அறிவித்துள்ளது. அதன்படி, தானேவில் அடுத்த வாரம் முதல் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதற்கான அபராதத்தை 2,000லிருந்து 10,000 ஆக உயர்த்தப்படும் என்று போக்குவரத்து போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்