பேனா விவகாரம்.! 8-ம் வகுப்பு மாணவியை அடித்து கொன்ற 10 வயது மாணவி .!
- வகுப்பறையில் 13 வயது மாணவியின் பேனாவை 10 வயது சக மாணவி ஒருவர் எடுத்துள்ளார்.
- இதில் ஏற்பட்ட தகராறில் 13 வயது சிறுமியை 10 வயது மாணவி இரும்பு தடியால் 19 முறை பள்ளி மாணவியை அடித்து கொன்று உள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் நகரில் பட்லி கிராமத்தில் உள்ள ஒரு பள்ளியில் ஒன்றில் 13 வயது சிறுமி 8-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர் தேர்வு எழுத பள்ளிக்கு சென்றுள்ளார். அந்த வகுப்பறைக்கு வந்த 10 வயது கொண்ட சக மாணவி ஒருவர் அவருடைய பேனாவை எடுத்துள்ளார்.
இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடந்து உள்ளது. எனது பேனாவை திருடி விட்டாய் என கூறி பள்ளி மாணவி , சக மாணவி உடன் சண்டை போட்டுள்ளார். பின்னர் சக மாணவி மீது பொருட்களை தூக்கி வீசியுள்ளார்.
தேர்வு முடிந்து வீட்டுக்கு சென்ற சக மாணவி தனது சீருடையை மாற்றி கொண்டு சக மாணவியின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அங்கும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த சக மாணவி இரும்பு தடியால் பள்ளி மாணவியை அடித்து உள்ளார். அதில் பலத்த காயமடைந்து பள்ளி மாணவி போலீசிடம் போகிறேன் என கூறி பள்ளி மாணவியை மிரட்டியுள்ளார்.
இதனால் சக மாணவி பயந்து வீட்டில் இருந்த ஆயுதத்தை எடுத்து 19 முறை பள்ளி மாணவியை அடித்து உள்ளார் . இதில் பலத்தகாயம் அடைந்த பள்ளி மாணவி உயிரிழந்தார். இதை தொடர்ந்து பிளாஸ்டிக் பையை வைத்து உடலை மூடி வைத்து விட்டு மாலை வேலை முடிந்து வீடு திரும்பி வந்த தாயாரிடம் கூறியுள்ளார்.
தன் மகளை காப்பாற்ற உடலை அருகே இருந்த குளம் ஒன்றில் வீசியுள்ளார். பின் தனது கணவரிடம் நடந்ததை பற்றி கூறியுள்ளார். குளத்தில் வீசிய உடலை இருவரும் எடுத்து வீட்டில் இருந்து தொலைவான இடத்தில் வீசி உள்ளனர்.
காணாமல் போன பள்ளி மாணவியை தேடிய போலீசார் வழக்கு பதிவு செய்து கொலை செய்த மாணவியை கைது செய்தனர். தடயங்களை மறைத்த குற்றத்திற்காக அவரது பெற்றோரையும் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். 8-ம் வகுப்பு மாணவியை 10 வயது சிறுமி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.