#BREAKING : பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் – உச்சநீதிமன்றம் கேள்வி..!

Default Image

பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் உளவு பார்க்கப்பட்டதாக இதுவரை எந்த புகார்களும் அளிக்கப்படாமல் இருப்பது ஏன் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி.

இஸ்ரேலின் என்எஸ்ஓ அமைப்பின் பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் இந்தியாவில் பத்திரிகையாளர்கள், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பலரின் செல்போன் ஒட்டுக் கேட்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. இந்த பெகாசஸ் ஒட்டுகேட்பு விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்தக்கோரி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், பெகசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் குறித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன் முதன் முதலாக விசாரணைக்கு வந்தது. அப்போது, பெகசஸ் மென்பொருள் மூலம் உளவு பார்க்கப்பட்டவர்கள் யாரும் இதுவரை எந்த புகாரும் அளிக்காதது ஏன்..? பத்திரிகைகளில் வெளியான செய்திகளின் அடிப்படையிலேயே வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பத்திரிக்கை செய்திகளின் தன்மையை ஆராய்ந்தே பிறகே விசாரணிக்குள் செல்ல முடியும், பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதில் சந்தேகம் இல்லை, பெகாசிஸ் உளவு பார்க்கப்பட்ட விவகாரம் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்றது. அதை தற்பொழுது ஏன் அவசர அவசரமாக விசாரிக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினர்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்