பெகாசஸ் ஒட்டுக்கேட்பு: விசாரணை ஆணையத்தை அமைத்த மேற்கு வங்கம்..!
பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் தொடர்பாக விசாரணை ஆணையத்தை மேற்கு வங்கம் அமைத்தது.
பெகாசஸ் உளவு மென்பொருள் விவகாரத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தொலைபேசி உளவு பார்க்க முடியற்சி செய்ததாகவும், அவரின் உறவினரான அபிஷேக் பானர்ஜி தொலைபேசி உளவு பார்க்கப்பட்டது என்றும், சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்காக மம்தா பானர்ஜி ஆலோசகராக செயல்பட்டு வந்த பிரசாந்த் கிஷோர் தொலைபேசியும் உளவு பார்க்கப்பட்டதாக பல்வேறு குற்றசாட்டுகள் எழுந்தது.
இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு விசாரணைக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், பெகாசஸ் உளவு மென்பொருள் விவகாரத்தில் ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி மதன் லோகூர் தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து மேற்கு வங்கம் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.