கடந்த ஆண்டு பெகாசஸ் மென்பொருள் விவகாரம் இந்தியாவில் மிகப் பெரிய சர்ச்சையைக் கிளப்பியிருந்தது.குறிப்பாக, பெகாசஸ் மூலம் ராகுல் காந்தி, தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர்,மத்திய அமைச்சர்கள், பத்திரிகையாளர்கள்,எதிர்க்கட்சித் தலைவர்கள், நீதிபதிகள் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோரின் மொபைல் போன்கள் கண்காணிக்கப்பட்டதாகக் கடந்த கூறப்பட்டது.இந்த விவகாரம் நாடு முழுவதும் மிகப் பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்தது.
மத்திய அரசு மறுப்பு:
ஆனால்,இந்தியாவில் அங்கீகரிக்கப்படாத கண்காணிப்பு எதுவும் நடத்தப்படவில்லை என்று மத்திய அரசு விளக்கம் அளித்திருந்தது. இதனையடுத்து,இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.
ரூ.25 கோடி பேரம்:
இந்நிலையில்,5 ஆண்டுகளுக்கு முன்பே,பெகாசஸ் மென்பொருளை தங்கள் மாநிலத்தில் விற்க ரூ.25 கோடி பேரம் பேசப்பட்டதாகவும், ஆனால்,அதனை வாங்க விரும்பவில்லை என்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
திட்டவட்டமாக மறுத்து விட்டேன்:
மேலும்,இது தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியதாவது:”5 ஆண்டுகளுக்கு முன்னர் இஸ்ரேல் நாட்டை சேர்ந்த என்எஸ்ஓ நிறுவனம் பெகாசஸ் உளவு மென்பொருளை விற்க எங்கள் காவல்துறையினரை அணுகினர்.இதற்காக,ரூ 25 கோடி பேரம் பேசினர்.இந்த செய்தி என்னிடம் வரவே,இதுபோன்ற மென்பொருள்களை வாங்க விருப்பமில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டேன்” என அவர் தெரிவித்தார்.
குற்றச்சாட்டு:
மேலும்,ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவி வகித்தபோது பெகாசஸ் மென்பொருளை அவர் வாங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.ஆனால்,பெகாசஸ் மென்பொருளை தங்களிடம் விற்பனை செய்ய சம்பந்தப்பட்ட நிறுவனம் முன்வந்தது உண்மை என்றும்,ஆனால்,அதை நிராகரித்துவிட்டதாகவும் தெலுங்கு தேச கட்சியின் பொதுச் செயலாளர் நாரா லோகேஷ் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கி டிசம்பர் 20ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.…
புது டெல்லி : மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி…
சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தற்போது வலுவடைந்துள்ளது.மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…